ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

By Digital Desk 5

18 Jun, 2022 | 08:56 AM
image

கடந்த மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, 9 நபர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டவர்களுள் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரதிந்து சேனாரத்ன என்ற ரெட்ட மற்றும் தம்மிக்க முணசிங்க ஆகியோரும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right