ஒருநாள் கிரிக்கெட்டில் 498 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை

17 Jun, 2022 | 08:41 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையான 498 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது.

நெதர்லாந்துக்கு எதிராக ஆம்ஸ்டெல்வின் வீ ஆர் ஏ விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 498 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நொட்டிங்ஹாம், ட்ரென்ட் ப்றிஜ்ஜில் 2018 ஜூன் 19ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குவித்த 9 விக்கெட் இழப்புக்கு 481 ஓட்டங்கள் என்ற தனது முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து இன்று சனிக்கிழமை (17) புதுப்பித்தது.

அப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக மூவர் சதம் குவித்ததன் மூலம் அந்த நாட்டுக்கான புதிய சாதனை நிலைநாட்டப்பட்டது. இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் தென் ஆபிரிக்கா சார்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் தலா மூவர் சதங்கள் குவித்திருந்தனர்.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து சார்பாக பில் சோல்ட் (122), டேவிட் மாலன் (125), ஜொஸ் பட்லர் (162 ஆ.இ.) ஆகிய மூவர் சதங்கள் குவித்தனர். எனினும் அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் ஒட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜேசன் ரோய் (1) ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றிருந்தது.

இரண்டாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பில் சோல்ட், டேவிட் மாலன் ஆகிய இருவரும் 222 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் டேவிட் மாலனும் ஜொஸ் பட்லரும் 184 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அத்துடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பட்லரும் லிவிங்ஸ்டோனும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதில் லிவிங்ஸ்டோனின் பங்களிப்பு 66 ஓட்டங்களாகும்.

499 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் நெதர்லாந்து சற்று நேரத்துக்கு முன்னர் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27
news-image

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி...

2025-02-03 15:05:26