(எம்.மனோசித்ரா)
உணவு தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எவரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே தனது கொள்கையாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உணவு பாதுகாப்பு தொடர்பான குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ,
'உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடும் என்றாலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.' என்றும் குறிப்பிட்டார்.
இதன் போது சிறுவர்கள் மற்றும் முதியோர் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு பிரதமர் இதன் போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் , அக்குழுவில் நிமல் சிறிபால டி சில்வா, கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, இராணுவம், தனியார் துறை உள்ளிட்ட அனைத்திலிருந்தும் உறுப்பினர்களை உள்ளடக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கையை இரு வாரங்களுக்குள் தன்னிடம் கையளிக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள 336 பிரதேச செயலகங்களில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் , எஞ்சியவற்றுக்காக அமைச்சுக்களின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மீனவ மக்களுக்கு தேவையான எரிபொருள் , எரிவாயு மற்றும் விவசாயத்திற்கு தேவையான எரிபொருள் என்பவற்றை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பிராந்திய ரீதியில் போட்டி நிறைந்த சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் பிரதமர் இதன் போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM