இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் ஜீலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தெரிவித்தார்.
இன்று (17) வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் மீண்டும் திகதி இடப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தின் கடைசிப்பகுதியில் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழங்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் 7 ஆம் மாதம் முதலாம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது.
ஆகவே ஜுலை மாதம் முதலாம் திகதி நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM