அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி இயக்குனர் திவ்யா சுஜேனின் தயாரிப்பில் , மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப்பேரன் இசை மேதை டாக்டர் ராஜ்குமார் பாரதி அவர்களின் இசை தயாரிப்பில் , அவர் முன்னிலையில் , சொக்கர் பிரவீன், நிவேதிதா கணேசன் ஆகியோரின் அரகேற்ற நிகழ்வு (25) மாலை 5.30 மணிக்கு கொழும்பு இராமகிருஷ்ணா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு உமா மகேஸ்வரன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து சிறப்பிக்க, திரு சி. விஜயசிங் , திருமதி லலிதா ரவீந்திரராசா, திரு க. மணிமார்பன், திரு. ரா. ஸ்ரீதர் ஆகிய ஹட்டன், கொழும்பை சேர்ந்த பிரபல பாடசாலை அதிபர்கள் கௌரவ  விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நவரச நிருத்திய நர்த்தனாலயா இயக்குனர் திருமதி ராணி சுலோச்சனா சிறப்பு விருந்தினராக வருகை தரவுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் புகழ் பெற்ற ஐம்பெருங் காப்பியங்களை  கருப்பொருளாகக் கொண்டு இவ்வரங்கேற்ற நாட்டிய மார்க்கம் முதன் முறையாக மேடையேற்றப்படுகிறது.