தரிசு நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள இராணுவ பசுமை விவசாய வழிகாட்டல் குழு நியமனம்

Published By: Digital Desk 5

17 Jun, 2022 | 09:14 PM
image

(எம்.மனோசித்ரா)

உணவு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு இராணுவத்தினால் பசுமை விவசாய வழிகாட்டல் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது. 

இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள தரிசு அல்லது கைவிடப்பட்ட அரச காணிகள் உள்ளடங்களான 1500 ஏக்கர்களில் விவசாயம்  மேற்கொண்டு இலங்கை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தை  மேம்படுத்தும் முகமாக  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை மாத தொடக்கத்தில் இவ் அவசர  செயற்த்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே தலைமையில், பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய இத் திட்டத்தின் முகாமைத்துவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ வழங்கள்  தளபதி மேஜர் ஜெனரல் இந்துசமரகோன், தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, வேளாண்மை மற்றும் கால்நடைகள் பணிப்பாளர்,  நடவடிக்கை பணிப்பக பணிப்பாளர், ஊடகப் பணிப்பாளர், மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணிப்பாளர், ஆராய்ச்சி கருத்து ரூ கோட்பாடு பணிப்பாளர், மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடங்குவர். 

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத்கொடிதுவாக்கு திட்டத்தையும் மேற்பார்வையிட உள்ளார்.

இக்குழுவின் ஆரம்ப அமர்வில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே புதிய குழுவிற்கு தேசிய முயற்சியின் நோக்கம் மற்றும் தேசிய இலக்குகளை அடைய விவசாயத் துறையுடன் இராணுவம் எவ்வாறு கைகோர்ப்பது என்பது பற்றி விளக்கியதுடன்  எதிர்காலத்தில் உணவு வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க , கைவிடப்பட்ட  நிலங்களில் உடனடி பயிர்ச்செய்கை மூலம் உணவு உற்பத்தி செயல்முறையைப் பெருக்குவது குறித்து விளக்கினார்.

முதற்கட்டமாக, நாடளாவிய ரீதியில் உள்ள இராணுவத்தினர் விவசாய நிபுணர்கள், விவசாய அதிகாரிகள் மற்றும் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்தின் அனுபவம்வாய்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தெரிவு செய்யப்பட்ட விதை வகைகளை பயிரிடுவதற்கு அவசியமான  களையெடுத்தல், உழுதல் மற்றும் பாத்திகளை தயார் செய்தல் மூலம் அந்த அரச நிலங்களில் தரை மண்ணை தயார் செய்வர். 

அத்தோடு ஏற்கனவே  இராணுவத்தால் 16 பண்ணைகள், மற்றும்  இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் 6 பட்டாலியன்கள் நாடு முழுவதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அத்தோடு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களும் படைப்பிரிவுகளும் தேசத்தின் பாதுகாவலர்களாக,   கைவிடப்பட்ட அரச நிலங்கள் மற்றும் நெல் வயல்களைப் பயன்படுத்துவதற்கான திறனை தற்போழுது ஆராய்கின்றன.

தெரிவு செய்யப்பட்ட காணிகளில் பூர்வாங்க வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர், அந்தந்த ஆளுநர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நெருக்கமான ஆலோசனையுடன் பிராந்திய மட்டத்தில் அரச காணிகளை அடையாளம் காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30