சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஜெயிலர்' என பெயரிடப்பட்டு அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை, 'பீஸ்ட்' படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
'தலைவர் 169' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது 'ஜெயிலர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யாராய், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கே. எஸ். ரவிகுமார், பிரியங்க அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் ஹைதராபாத்தில் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
'ஜெயிலர்' படத்தின் திரைக்கதையில் ரஜினியின் நண்பரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் பங்களிப்பு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
'ஜெயிலர்' ஆகும் சுப்பர் ஸ்டாருக்கு அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்து, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM