(எம்.எம்.சில்வெஸ்டர்)
எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் 220 வாகனங்களுக்கு மேல் வரிசைகளில் இருபத்தில் அர்த்தமில்லை. எரிபொருள் பவுசரால் 220 வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க முடியும்.
ஆகவே, அதற்கு மேல் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வாகன வரிசைகளை உருவாக்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, வரிசையில் நிற்கும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் எரிபொருளை வழங்க முடியாது எனவும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நின்றுகொண்டு வீணாக நேரத்தை செலவிடாது இருக்கும்படியும் அவர் மேலும் கேட்டுக்ககொண்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் ஒரு பவுசரில் சுமார் 6,600 லீற்றர் எரிபொருள் இருக்கிறது. அது 220 வாகனங்களுக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும்.
ஆகவே, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ஒரே இடத்தில் நின்று காலத்தை செலவிடுவதில் அர்த்தமில்லை.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு குறித்தவொரு நேரத்தில் ஒரு பவுசரை மட்டுமே அனுப்ப முடியும் மேலும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டால் அன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பவுசர்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM