(க.கிஷாந்தன்)
சர்வதேச வீட்டுத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் 16 ஆம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
புரொடெக்ட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமானது.
300 ற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர். பின்னர் அட்டன் தொழில் திணைக்களத்திற்கு பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கு தொழில் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
வீட்டுப்பணியும் ஒரு தொழில் தான். எனவே வீட்டுப் பணியாளரையும் தொழிலாளியாக கருது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளும் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீட்டு உரிமையாளர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளை, நாட்டில் பொருட்களின் விலைகள் தொடச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்களுக்குரிய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வரிசை யுகத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தியமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM