முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன தாக்கல் செய்த பிணை மனு  எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத காரணத்தால் குறித்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் நவம்பர் இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.