வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடு காட்டுப் பகுதியில் மரக் கடத்தல் முயற்சி வட்டார வனவள அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
நைனாமடுவில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று இரவு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வட்டார வனவள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வட்டார வனவள அதிகாரி சமரதுங்க தலைமையிலான உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வட்டார வனவள அலுவலக அதிகாரிகளின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் மரக் குற்றிகளை வட்டார வனவள அலுவலகத்திற்கு ஏற்றி சென்றுள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகள் நெடுங்கேணி பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த மரக் குற்றிகளையும், டிப்பர் வாகனத்தையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM