யூனியன் அஷ்யூரன்ஸ் கிரீடமிடும் சிறப்பு

Published By: Digital Desk 5

17 Jun, 2022 | 09:52 AM
image

யூனியன் அஷ்யூரன்ஸ் PLC தனது உயர் வெற்றியாளர்களை அவர்களது முன்மாதிரியான செயல்திறனுக்காக கௌரவப்படுத்தும் பொருட்டு 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது.

இந்த நிகழ்வு 2022 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி “மோனார்க் இம்பீரியலில்” 'கிரீடமிடும் சிறப்பு' என்ற கருப்பொருளின் கீழ் விழா நடைபெற்றது.

வெற்றியாளர்களுக்கு முடிசூட்டப்பட்ட இந்த நிகழ்வு, ஜான்கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் கிரிஷன் பாலேந்திரா மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜூட் கோம்ஸ் ஆகியோர் அடங்கிய தலைசிறந்த தலைமைக் குழுவால் சிறப்பிக்கப்பட்டது.

 

 670 க்கும் மேற்பட்ட விருது வென்றவர்களின் மிகச்சிறப்பான செயல்திறனை இந்த விருது வழங்கும் விழா அங்கீகரித்துள்ளது, இது நிறுவனத்தின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வருடாந்த விருதுகளை வென்றவர்களின் எண்ணிக்கையை உருவாக்கியது, இது 2021 இல் சாதனை படைத்த செயல்திறனால் அடையப்பட்ட வெற்றியாகும்.

அன்றைய வெற்றியாளர்களில் நாடளாவிய ஏஜென்சி வலையமைப்பின் ஆலோசகர்கள், முகவர் தலைவர்கள், பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வலய முகாமையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 

 ஏஜென்சி பிரிவில் (மிகச்சிறந்த வலயம் மற்றும் மிகச்சிறந்த பிராந்தியம் உட்பட) பல வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள், அதே நேரத்தில் அல்டிமேட் சாம்பியன் கெலும்ஜெயசிங்க மெர்சிடிஸ் பென்ஸ் காரை வெகுமதியாகப் பெற்றார். சானக அப்புஹாமிக்கு அவரது டாப் ஆஃப் தி டேபிள் கிளப் சாதனைக்காக மெர்சிடிஸ் பென்ஸ் ஒன்றும் வழங்கப்பட்டது. 

 யூனியன் அஷ்யூரன்ஸின் CEO, ஜூட் கோம்ஸ் சிறந்த பெறுபேறுகளை வழங்கியதற்காக வெற்றியாளர்களைப் பாராட்டினார்.

2021 ஆம் ஆண்டு கொரோனா தோற்று சவால் நிரம்பிய ஆண்டாக இருந்தபோதும் கூட அவர்களின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை என்று விவரித்தார்.

GWP, லாபம் மற்றும் வருமானம் ஆகிய சகலவற்றிலும் நாம் மிகச்சிறந்த வியாபார வளர்ச்சியை அடைந்துள்ளோம் " என்று அவர் வலியுறுத்தினார்.

சிறந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கிடையில் மிக உயர்ந்த Regular GWP வளர்ச்சியை நிறுவனம் பதிவுசெய்தது, மேலும் தொழில்துறையின் இரண்டாவது பெரிய Regular New Business producer ஆனது.

மில்லியன் டாலர் வட்ட மேசையில் (MDRT) 300 தகுதியாளர்களை உருவாக்கியது - இது இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையின் வரலாற்றில் மிக உயர்ந்தஅடைவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

 திரு. கோம்ஸின் கூற்றுப்படி, தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட உத்தி ஒரு புதிய யுகமான, எதிர்கால நிறுவனமாக விரைவான டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுத்தது. "இலங்கையில் ஆயுள் காப்புறுதி சேவையில் புரட்சியை ஏற்படுத்திய கிளிக்லைஃப் செயலி நுகர்வோருக்கு வழங்கப்படும் தடையற்ற டிஜிட்டல் அனுபவம்" என்று அவர் வலியுறுத்தினார். மற்றொரு முன்னோடி முன்முயற்சி ஹெல்த் 360. பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளடக்கிய இந்தத் திருப்புமுனை சுகாதார காப்பீடு காப்புறுதிதாரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக மிகச்சிறந்த தீர்வு. 

 முன்னெப்போதும் இல்லாத சவால்களுக்கு மத்தியிலும் 2022ம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என்று திரு.கோமஸ் நம்பிக்கை தெரிவித்தார். 

 யூனியன் அஷ்யூரன்ஸின் தலைமை விநியோக அதிகாரி, சேனத் ஜெயதிலக அவர்கள் சிறப்பாக செயல்பட்ட அணிக்கு நன்றி தெரிவித்தார், இதற்கு அவர்களின் தொழில் திறமை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவையே காரணம் என்றும் கூறினார்.

"2021 ஒரு சவாலான ஆண்டாக இருந்தாலும், உங்கள் ஆர்வமும் பங்களிப்புகளும் நிறுவனத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றன, பயணத்தில் பல குறிப்பிடத்தக்க அடையாளங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் அவர் கூறினார். 

 அவர் மேலும் கூறுகையில், "எங்கள் அணியைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் 2022 இல் அவர்கள் இன்னும் உயரத்தை எட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றும் அவர் கூறினார். 

 யூனியன் அஷ்யூரன்ஸ் 2021 இல் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தது. அச் சாதனை வெற்றிகளில் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் அதிக எண்ணிக்கையிலான MDRT தகுதியாளர்களை உருவாக்கியது வரலாற்றுச் சாதனையாகும். 

வருடாந்த விருது வழங்கும் விழா மாலை மற்றும் இரவு முழுவதும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் சிறப்பிக்கப்பட்டது. இதில் உமரியா சின்ஹவன்சா மற்றும் சானுத்ரி பிரியாசாத் ஆகியோரின் கண்கவர் நிகழ்ச்சிகள் அடங்கும். 

யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும்.

இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற காப்புறுதி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும், மூன்று தசாப்த கால வெற்றியை நிறைவுசெய்து சந்தை மூலதனம் ரூ. 17.9 பில்லியன், ஆயுள் நிதி ரூ. 49.7 பில்லியன் மற்றும் முதலீட்டு மூலதனப் பங்களிப்பாக மார்ச் 2022 நிலவரப்படி ரூ. 58.5 பில்லியனாகவும் இருக்கிறது.

இலங்கையர்களின் கனவுகளை மேம்படுத்தும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கையர்களின் கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் தேவைகளை உள்ளடக்கிய ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குகிறது.

நாடு தழுவிய கிளை வலையமைப்பு மற்றும் 3,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், யூனியன் அஷ்யூரன்ஸ், ஆயுள் காப்பீட்டுத் துறையில் உருவாகி வரும் மாற்றங்களுக்கு ஏற்ப தீர்வு வழங்கும் வகையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு மக்கள், நிறுவன உற்பத்திகள் மற்றும் செயல்முறைகளில் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58