பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் ஜி.எல்.பீரிஸ் எடுத்துரைத்து உதவிகோரினார் 

Published By: Vishnu

17 Jun, 2022 | 08:21 AM
image

(நா.தனுஜா)

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 கூட்டத்தொடரில் பங்கேற்பதற்குச் சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அங்கு ஜப்பான், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரதிநிதிகளைச் சந்தித்து நாட்டின் நிலைவரம் குறித்து விளக்கியிருப்பதுடன் தற்போதைய சூழ்நிலையில் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஜப்பானின் வெளிவிவகாரப் பிரதியமைச்சர், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர், அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள், நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 16 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்றது.

ஜப்பானின் வெளிவிவகார பாராளுமன்ற துணை அமைச்சர் மியாகே ஷிங்கோவுடனான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் பரஸ்பர நட்புறவு குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், ஜப்பானுடனான உறவு இலங்கைக்கு இன்றியமையாதது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பல தசாப்தங்களாக ஜப்பான் இலங்கையின் நெருங்கிய பங்காளியாக இருந்து வருவதாகவும், குறிப்பாகத் திறன் அபிவிருத்தி, கணினித்தொழில்நுட்பம், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நிர்மாணம், ரூபாஹினி கூட்டுத்தாபனத்திற்கான உதவிகள், மருத்துவம் மற்றும் மருந்துப்பொருட்களுக்காக அண்மையில் வழங்கப்பட்ட உதவிகள் உள்ளடங்கலாக ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்தார். 

மேலும் இச்சந்திப்பின்போது இரண்டாம் உலகப்போரின் முடிவில் சான்பிரான்ஸிகோ மாநாட்டில் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது நினைவுகூரப்பட்டது.

டிஜிட்டல் மயமாக்கல், கார்பன் கடன் மற்றும் கடலோரப்பாதுகாப்பு, மீன்பிடி மற்றும் புவி வெப்பமடைதல் உள்ளிட்ட விடயங்களில் ஜப்பானுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இலங்கை விரும்புவதாகவும் ஜப்பான் வெளிவிவகார பாராளுமன்ற துணை அமைச்சரிடம் ஜி.எல்.பீரிஸ் எடுத்துரைத்தார். அதற்குப் பதிலளித்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச அரங்கில் இலங்கையுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, மேலும் வலுப்படுத்துவதற்கு தமது நாடு விரும்புவதாகத் தெரிவித்தார்.

 அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மிச்சேல் டெய்லருடன் இடம்பெற்ற சந்திப்பில், தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் மற்றும் நாட்டின் சமூக, பொருளாதார நிலைவரம் குறித்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விளக்கமளித்தார்.

அடுத்ததாக ரூவாண்டாவின் கிகாலியில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய உச்சி மாநாடு குறித்து பிரிட்டனின் பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரபுவுடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. அத்தோடு நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சரிடம் விளக்கிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இப்போது பல்வேறு வழிகளிலும் நன்மையளிக்கக்கூடிய கட்டமைப்பாக பொதுநலவாய அமைப்பைக் கருதுவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31