தேசபந்து தென்னகோனை கைது செய்து ஆஜர் செய்ய உத்தரவிடுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல்

Published By: Vishnu

17 Jun, 2022 | 08:25 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்களின் போது, கடமை தவறியதாக கூறி  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவிடுமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ்  கோட்டை நீதிவான் நீதிமன்றில் இந்த  தனிப்பட்ட மனு ( ப்ரிவடெ ப்லைன்ட்)  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு அருகே நடந்த தாக்குதல்களின் போது கடும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற வர்த்தகர்  செய்யத்  மொஹம்மட் நியாஸ் மெளலானா என்பவரே இந்த தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவை , சட்டத்தரணிஅச்சலா செனவிரத்ன ஊடாக தாக்கல் செய்துள்ளார்.

இந் நிலையில் குறித்த மனு,  கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று முன் தினம் ( 15) பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரருக்காக மன்றில் ஆஜரான  சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன,  குறித்த மனுவை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு  கோரினார்.

காலி முகத்திடல் சார் மக்கள் போராட்டங்களை மையப்படுத்திய வழக்குகளை கோட்டை நீதிவான்  திலின கமகே முன்னிலையில்  விசாரிக்க கூடாது எனக் கூறி, நீதிச் சேவை ஆணைக் குழுவுக்கு  முறைப்பாடளித்த சட்டத்தரணிகளில் தானும் ஒருவர் என்பதால், இந்த மனுவை கோட்டை நீதிமன்றில் விசாரிக்காது கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன குறிப்பிட்டார்.

இதனையடுத்து முறைப்பாட்டாளர் தரப்பின் கோரிக்கை பிரகாரம், மனுவை கொழும்பு பிரதான நீதிவானுக்கு மாற்றி கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டார்.

கடந்த மே 9 ஆம் திகதி மைனா கோ கம, கோட்டா கோகம மீதான தாக்குதல்களின் போது,  தான் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், தேசபந்து தென்னகோன் தனது கடமையை சரியாக செய்திருந்தால் தான் தாக்குதலுக்குள்ளாகியிருக்க போவதில்லை எனவும் மனுதாரர்  மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந் நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி தனது கடமையை சரிவர செய்யாது பொலிஸ் கட்டளை சட்டத்தின் 56, 82,83 ஆம்  அத்தியாயங்களை மீறியுள்ளதாக வும் அதனால் அவரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய உத்தரவிடுமாறும் மனுதாரர் மனுவூடாக கோரியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38