15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை : மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரின் வெளிநாட்டு பயணத் தடை நீதிமன்றால் தற்காலிகமாக தளர்த்தல்

Published By: Vishnu

17 Jun, 2022 | 08:32 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

15 வயதான சிறுமி ஒருவர், இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில்,  மாலை தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலிக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை 16 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு மேலதிக நீதிவான்  கோமிந்த பெரேரா பிறப்பித்தார்.

15 வயதான சிறுமி ஒருவர், இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில்,  குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், மாலை தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி கடந்த 2021 ஜூலை 3 ஆம் திகதி  கைது செய்யப்ப்ட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே,  அவர் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷன மாத்தறகே முன் வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு கடும் நிபந்தனையின் அடிப்படையில் கடந்த 2021 ஜூன் 16 ஆம் திகதி பிணையளித்தது. 

25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல இதன்போது அனுமதித்த அப்போதைய கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம,  சந்தேக நபரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து , அவரது கடவுச் சீட்டை மன்றில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, தற்போது அவரது வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டு வெளிநாடு செல்ல அவருக்கு கடவுச் சீட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த  2018 ஆம் ஆண்டு முதல்  இலங்கையில் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக  இலங்கையில் தங்கியிருப்பதாகவும்  கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குறித்த சிறுமி  அவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக  விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19