நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக் கிளை) நடாத்தும் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடல் நிகழ்வும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு - 2 இலக்கம் 40, நவம் மாவத்தையில் அமைந்துள்ள NDB கேட்போர் கூடத்தின் 3 ஆவது மாடியில் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடல் நிகழ்வும்இடம்பெறவுள்ளது.

அனைத்து பழைய மாணவர்களையும் இப்பொதுக்கூட்டத்திற்கும் அதன் பின் நடைபெறவுள்ள இராப்போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இராப்போசன அனுமதிக்கட்டணம் 1,500 ரூபா என ஏற்பாட்டாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு சங்கத்தின் கிளைத்தலைவர் மற்றும் கிளைச்செயலாளரை தொடர்பு கொள்ளலாம் 

தொடர்புகளுக்கு கிளைத்தலைவர் 077 3166803, கிளைச்செயலாளர் 077 7485312