அரபுநாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் ஏற்பாடுகள் ஆரம்பம் ; சவூதி தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சு

Published By: Vishnu

16 Jun, 2022 | 03:49 PM
image

அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று  புதன்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர் அப்துல்லா எ.எ.ஒர்கோபியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் சந்தர்ப்பமாக இப்பேச்சுக்கள் அமைந்திருந்தன. 

அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரியான ரி.ஷற்.ஏ சம்சுடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால் அடையக்கூடிய அதிகளவான நன்மைகளை அடையாளங்காணல் மற்றும் அவற்றை நடைமுறைபடுத்துவதில் இருநாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படல் என்பது பற்றி பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு,சவூதி ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. முறையான எரிபொருள் விநியோகம் இன்னும் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு விஷேட வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்களையும் அமைச்சர் நஸீர் அஹமட் சவூதிஅரேபிய தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

சவூதியில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் விடயங்களிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43