மத்திய கிழக்கு நாடுகளில் கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுங்கள் ; பிரதமருக்கு எதிர்க்கட்சி ஆலோசனை

Published By: Digital Desk 5

17 Jun, 2022 | 08:41 AM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கடன் திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்துகின்றோம்.

வேலைத்திட்டங்களை விடுத்து ஊடகவியலாளர்களைப் போன்று நிலைமைகளை அறிக்கையிடுவதை பிரதமர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் தெரிவித்த கருத்தினை வாபஸ் பெற முடியாது. அதற்கு அவருக்கு உரிமை கிடையாது.

காரணம் அவரால் இது குறித்து நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த விடயங்கள் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு கோப் குழுவில் சரியான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறது.

எனவே அவரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தீர்க்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

அவ்வாறிருக்கையில் இது போன்ற கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமையானது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளையும் பாதிக்கும்.

தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களைப் போன்று நாட்டிலுள்ள பிரச்சினைகளை அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றார். அவருக்கு நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான பலம் இல்லை.

எனவே எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து 6 மாதங்களுக்கு அல்லது ஒரு வருட காலத்திற்கு கடன் திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறு கடன் திட்டத்தின் ஊடாக எரிபொருளைப் பெற்றுக் கொண்டால் அதற்காக செலவிடும் பணத்தை எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு உபயோகிக்க முடியும்.

எரிபொருள் , எரிவாயுவைப் பெற்றுக் கொண்டால் நாட்டிலுள்ள வரிசைகள் குறைவடையும். வரிசைகள் குறைவடைந்தால் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும்.

சுற்றுலாத்துறை ஊடான வருமானத்தை அதிகரித்துக் கொண்டால் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு படிப்படியாக தீர்வு காண முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39
news-image

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர்...

2024-10-05 15:18:19