பிரித்தானியாவில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 500 ஐ கடந்தது

By T. Saranya

16 Jun, 2022 | 12:28 PM
image

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோய் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஐந்நூரை கடந்துள்ளது.

பிரித்தானியாவில் நேற்று இங்கிலாந்தில் 52 பேருக்கும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில்  ஒருவருக்குமாக  குரங்கு அம்மை  இனங்காணப்பட்டதோடு, இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.

அதில் இங்கிலாந்தில் 504 பேரும், ஸ்கொட்லாந்தில் 13 பேரும், வேல்ஸில் 5 பேரும், வட அயர்லாந்தில் இரண்டு பேரும் அடங்குவர் என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

"எவருக்கும் குரங்கு அம்மை வரலாம், குறிப்பாக அறிகுறிகள் உள்ள ஒருவருடன் பாலியல் தொடர்பு உட்பட நெருங்கிய தொடர்பு வைத்திருந்தால் தொற்று ஏற்படும்.  தற்போது, பெரும்பாலான தொற்றார்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கும் ஆண்கள், இருபாலினம் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்பவர்களிடம் உள்ளது என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right