மங்கையர் நுதலில் பேசும் குங்குமம்!

Published By: Nanthini

16 Jun, 2022 | 12:56 PM
image

வ நாகரிகம் உச்சத்துக்கே நடை போட்டுக்கொண்டிருக்கின்றதை யாவரும் அறிவோம்.

நெற்றியில் பொட்டு, கூந்தலில் மலர்க்கொத்து, விரல்களில் மருதாணி அலங்காரம், பாதசரம், மெட்டி, கழுத்து நகை என தமிழின் அடையாளமாக நடைபோட்ட காலம், மெல்ல மெல்ல நகர்ந்து ஒவ்வொன்றாக களையப்பட்டு இன்று ‘மங்கை’ என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக செயற்கை அணிகலன்கள் வெளிவந்துள்ளதையும், அவற்றை அனைத்து வகுப்பினரும் வயதினரும் உபயோகப்படுத்துவதையும் அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம்.

நெற்றியில் குங்குமப் பொட்டை ஒரு திருமணமான தமிழ்ப்பெண் மட்டுமே அணிந்துகொள்வது வழக்கமாகும்.

திருமணமாகாத பெண்கள் கறுப்பு, சிவப்பு திரவப் பொட்டுக்களையும் ஒட்டுப் பொட்டுக்களையும் அணிவது வழக்கமாக இருந்து வருகின்றது.

ஒரு தமிழ்ப் பெண்ணின் நெற்றியில் குங்குமப் பொட்டின் அடையாளம் என்ன?

நிமிர்ந்து வரும் ஆடவன் கண்களுக்கு அக்குங்குமப் பொட்டானது, அவள் திருமணமானவள் என்பதை அறிவுறுத்துகின்றது அல்லவா? இது தமிழ்ப் பண்பாட்டில் ஒரு திருமணமான பெண்ணுக்குரிய அடையாளமாகும்.

கன்னிகையர் குங்குமப் பொட்டு அணிந்துகொள்வதை தமிழ்ப் பண்பாடு அனுமதிப்பதில்லை.

ஒரு தமிழ்ப் பெண் தன் கணவரை இழந்த கணமே, குங்குமப் பொட்டு அணிவதை நிறுத்திக்கொள்வதும் முற்றாக தவிர்த்துக்கொள்வதும் எமது தமிழ்ப் பண்பாட்டில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம், கொள்கை ஆகும்.

அன்றைய காலகட்ட சூழ்நிலை போலல்லாது, இக்காலத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றனர்.

இக்கால கட்டத்தில் பெண்கள், அதாவது திருமணமான பெண்கள், ஒரு காவல் நகையாக அணிந்துகொள்ளும் தாலிக் கொடியையும் அணிந்து நடமாட முடியாத நிலையில்தான் ஏற்கனவே ஒருவருக்கு சொந்தமானவள், திருமணமானவள் என்பதை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்?

கணவனானவன் பக்கத்தில் இல்லாத நிலைமையில் எந்தவொரு இடத்திலும் அவளுக்குப் பாதுகாப்பை அளிப்பது அவளது நுதலிடப்பட்ட குங்குமத் திலகமும் அவளது கழுத்தின் அணிகலனான தாலிக் கொடியுமே ஆகும்.

சூட்சுமமாக தனக்குக் காவலாக நின்று கொண்டிருக்கும் தன் கணவனுக்காக தனக்கு வாழ்வளித்து வாழவைத்த கணவனுக்காக, ஒரு பெண் குங்குமப் பொட்டை தன் வாழ்நாள் முழுவதும் களையாது அணிந்திருத்தல் தவறா?

தனது உடலும் உள்ளமும் அந்த ஒருவருக்கே என்று தன் நெற்றியில் இருக்கும் குங்குமப் பொட்டினூடே ஒரு விதவையானவள் பேசத் தொடங்குவது தவறா?

- திருமதி. இராஜினி தேவராஜன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்