சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முற்பட்ட 64 பேர் கைது

By Vishnu

15 Jun, 2022 | 10:50 PM
image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினரால் கிழக்கு கடப் பிரதேசத்தில் 15 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முற்பட்ட 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய திருகோணமலைக்கு அப்பாற்பட்ட கடற் பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே குறித்த 64 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்களும் , 50 ஆண்களும், 11 பெண்களும் , 3 சிறுவர்களும் உள்ளடங்களாக இவ்வாறு 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த மீன்பிடிப்படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்படை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right