(எம்.மனோசித்ரா)
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கான தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் கியூ சென் யொங் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் 15 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன தூதுவர் இலங்கைக்கான தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, மானியங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மீள செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களை சரியான முறையில் கையாள்வதற்காக சீன வங்கிகளும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகள் மற்றும் திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து சீனத் தூதுவருடன் பிரதமர் விக்கிரமசிங்க கலந்துரையாடினார். தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உத்வேகத்தை உருவாக்குவதற்கு இரு தரப்பு ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM