மன்னாரில் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனியவள மணல் அகழ்வு - அருட்பணி ஞானப்பிரகாசம்

By Vishnu

15 Jun, 2022 | 10:26 PM
image

எம் நாட்டில் போர்க்காலங்களில் சத்தத்துடன் பாதிப்புக்கள் காணப்பட்டன. ஆனால் இப்பொழுது சத்தம் இல்லாத தன்மையில் பாதிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

மன்னாரில் கனியவள மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்த்தும் அது மிகவும் நேர்த்தியாக இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் கவலை உண்டு பண்ணி வருவதாக மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழுவின் மாதாந்த ஆளுநர் சபை கூட்டம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இதன் அலுவலகத்தில் இடம்பெற்றபோது இதன் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நாம் இந்த சமகாலத்தை நோக்கும்போது மிகவும் பயங்கரம் நிறைந்த காலக்கட்டமாக காணப்படுகின்றது.

கடந்த போர் காலங்களைவிட இது மிகவும் மோசம் நிறைந்த காலமாக அமைந்துள்ளது.

தற்பொழுது எங்கும் பாதுகாப்பு அற்ற தன்மையாக காணப்படுகின்றது. வீடுகள் தெருக்கள் மத ஸ்தானங்கள் வைத்தியசாலைகள் போன்றவற்றிலும் தற்பொழுது பாதுகாப்பு அற்றத் தன்மையே காணப்படுகின்றது.

போர்காலங்களில் சத்தத்துடன் பாதிப்புக்கள் காணப்பட்டன. ஆனால் இப்பொழுது சத்தம் இல்லாத தன்மையில் பாதிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் தீவு அழிந்து போகும் தன்மையில் கனியவள மணல் அகழ்வு இடம்பெற்ற ஆரம்ப காலம் முதல் மன்னார் மக்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன் தெருக்களில் இறங்கியும் இவ் செயல்பாட்டுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்களையும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர்.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது என்றால் மன்னார் மக்களுக்கு தெரியாமல் இந்த மணல் அகழ்வு இரவிலும் மின்சார தடையுள்ள நேரங்களிலும் மிகவும் நேர்த்தியாக இடம்பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது மாவட்ட தலைமைத்துவங்களும் அக்கறையின்றி இருந்து வருவதாக இப் பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சமகாலத்தில் இவ் விடயம் மன்னார் மக்களுக்கு ஒரு சவாலாக இருந்து வருவதுடன் பொருளாதார பிரச்சனையும் மறுபுறம் அரசியல் பிரச்சனைகளும் எம் மத்தியில் தாண்டவமாடி வருகின்றது.

இந்த நிலையில் எங்கும் சமூதாய சீரழிவும் அனைவரையும் தாக்கும் நிலையும் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் எம் நாட்டில் சரியான அரசியல் கட்டமைப்பும் ஏனைய கட்டமைப்புக்கள் அற்ற நிலை காணப்படுவதால் சமூதாயம் குறிப்பாக எதிர்கால சந்ததினர் நாளாந்தம் பெரும் சீரழிவுக்கு தள்ளப்பட்டு வருவது அனைவர் மத்தியிலும் கவலையை உண்டுபண்ணி வருகின்றது என இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right