ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துல்ல கருணாரத்ன பிறப்பித்துள்ளார்.

இதேவேளை வழக்கு தொடர்பான ஆட்சேபணைகளை குறித்த ஒத்திவைப்பு தினத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச தரப்பு மற்றும் பிரதிவாதிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

 எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் 415 இலட்சம் ரூபா சொத்துக்களை  சம்பாதித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.