இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளாதாக நஷீட் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது - ஹர்ஷ டி சில்வா

Published By: Vishnu

15 Jun, 2022 | 10:19 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு உதவுவதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹம்மட் நஷீட் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அவருடன் உரையாடிய கருத்துக்கள் தொடர்பில் தான் தெரிவித்த விடயங்களில் உறுதியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவ மறுத்து விட்டதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் தன்னிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்ததாக கலாநிதி ஹர்ஷ சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும் மொஹம்மட் நஷீட் ஹர்ஷவின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்திருத்து டுவிட்டர் பதிவொன்றையும் பதிவு செய்திருந்தார்.

இவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில் , மொஹம்மட் நஷீட்டின் கருத்திற்கு ஹர்ஷ டி சில்வா மீண்டும் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள அவர், 'என் நண்பர் மொஹம்மட் நஷீட்டுடன் சில வாரங்களுக்கு முன்பு பேசிய விடயகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன்.

எவ்வாறாயினும், பல நாடுகள் இலங்கைக்கு உதவ ஆர்வமாக உள்ளன என்பதை இப்போது அவர் நம்புவதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளுக்காக...

2025-11-10 16:53:48
news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43
news-image

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது

2025-11-10 17:07:20
news-image

புத்தல - மொனராகலை பிரதான வீதியில்...

2025-11-10 17:01:40
news-image

கஞ்சா வியாபாரி கைது!

2025-11-10 18:05:14
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை...

2025-11-10 16:54:00
news-image

இலங்கை - சவூதி அரேபியாவுக்கு இடையேயான...

2025-11-10 17:33:54