(எம்.ஆர்.எம்.வசீம்)
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக வழங்குவதாக தெரிவித்த எரிபொருளையு சேர்த்து அரச போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கு விநியோகிக்கப்படுறது. இது இரு தரப்பினரிடையே பாரிய மோதல் நிலைக்கு செல்லும் அபாயம் இருக்கின்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அத்துடன் 15 ஆம் திகதி புதன்கிழமை பயணிகள் போக்குவரத்து சேவை நூற்றுக்கு 80 வீதம் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.
எரிபொருள் இல்லாமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பயணிகள் போக்குவரத்து சேவை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் எற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து சேவை பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றது.
சில வீதிகளில் வழமையாக 20முதல் 25 தனியார் பஸ் வண்டிகள் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றபோதும் நேற்றைய தினம் 2 பஸ்களே சேவையில் ஈடுபட்டிருந்தன.
அதேபோன்று கிராமப்புறங்களில் பயணிகள் பஸ் சேவை முற்றாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அந்த பிரதேசங்களில் எரிபொருள் முற்றாக இல்லாமல் இருக்கின்றது.
பொதுவாக நேற்றைய தினம் 80 வீததுமான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நாங்கள் கலந்துரையாடிய எந்த விடயமும் செயலுறு பெறவில்லை . இது பாரிய பிரச்சினையாகும்.
அத்துடன் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் மாத்திரம், எமக்கு வழங்குவதாக தெரிவித்த எரிபொருளையும் பெற்றுக்கொண்டு போக்குரவத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரக்தியுடன் இருக்கின்றனர். இதன் காரணமாக ஒருசில பிரதேசங்களில் தகராறுகள் ஏற்படும் நிலை இருந்தபோது அதனை நாங்கள் சமாதானப்படுத்தினோம்.
அதனால் எமது பஸ் சங்க ஊழியர்கள் இலங்கை போக்குவரத்து பஸ் டிப்போவுக்கு சென்று எரிபொருளை நிரப்பிக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.
அதனால் டிப்போக்களில் தனியார் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் விரைவாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இல்லாவிட்டால் மோதல் ஒன்று ஏற்படுவதை தடுக்க முடியாமல் போகும்.
மக்களுக்கு எரிபொருள் இல்லை என்றால் பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்து சேவை அத்தியாவசியமாகும் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். எரிபொருள் விடயத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றன.
600ரூபாவுக்கு டீசல் தேவையானளவு இருக்கின்றது.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று தங்களின் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு வந்து , பின்னர் அதன வெளியில் எடுத்து களஞ்சியப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
எனவே அரசாங்கம் பொதுப்போக்குவரத்தை உறுதிப்படுத்த உடனடியாக முறையான வேலைத்திட்டத்தை அமைக்கவேண்டும்.
போக்குவரத்து அமைச்சு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை அதுதொடர்பில் எந்த வேலைத்திட்டத்தையும் தயாரிக்கவில்லை.
ஒன்றாக இருந்து கலந்துரையாடவும் இல்லை. அதனால் பொதுப்போக்குவரத்து சேவையை முன்கொண்டுசெல்ல அனைவரும் ஒன்றாக இருந்து, தீர்மானம் மேற்கொள்வோம்.
இல்லாவிட்டால் ஒருபோதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் பாரிய மோதலிலேயே இது முடிவடையும் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM