அமைதிப்போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத்தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகள் கவலை

By Digital Desk 5

15 Jun, 2022 | 10:14 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் குறித்து மிகுந்த கவலையடைவதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடரின்போது சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிசெய்யவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (13) ஜெனீவாவில் ஆரம்பமானது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து 46ஃ1 என்ற புதிய தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் சார்பில் மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃப்ரென்ச் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தற்போது நடைபெற்றுவரும் 50 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைய சில மாதங்களாக இலங்கை முகங்கொடுத்திருக்கும் சவால்கள் குறித்து நாம் புரிந்துகொள்வதுடன், அவை இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரம், கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகிய தமது உரிமைகளை அனுபவித்துவருவதை நாம் அவதானித்துள்ளோம்.

அதேவேளை அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள், அதனைத்தொடர்ந்து அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் என்பன தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.

அவ்வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிசெய்தல் மற்றும் முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையைப்பேணல் ஆகியவற்றின் அவசியத்தை மீளவலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி நீண்டகாலமாக நிலவும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு மற்றும் ஊழல் மோசடிகள் என்பன தொடர்பில் அவதானம் செலுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் உரியவாறான நிர்வாகம் மற்றும் சீரான பொருளாதாரக்கொள்கைகள் ஆகியவற்றின் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

மேலும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துவதுடன், சிவில் சமூக இடைவெளியைப் பேணுவதன் அவசியத்தையும் மீளவலியுறுத்துகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் அவரது அலுவலகத்திற்கும் உரியவாறான ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கையை வலியுறுத்துவதுடன், மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05
news-image

நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றக் கூடாது...

2022-10-06 18:35:17
news-image

அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காது வெளியேறுங்கள் -...

2022-10-06 18:45:23
news-image

ஜனாதிபதி, பிரதமரின் காரியாலயங்களுக்கு ஒருசிலரை அழைத்து...

2022-10-06 19:04:39
news-image

பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது...

2022-10-06 21:38:59