பாக்கிஸ்தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளத்தொடங்கியுள்ள நிலையில்மக்களை தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாக்கிஸ்தானின் திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சர் அஹ்சான் இக்பால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு மேலதிக சுமையாக உள்ளதால் பொதுமக்கள் நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு தடவை மாத்திரம் தேநீர் அருந்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடனை பெற்றே நாங்கள் தேயிலையை இறக்குமதி செய்கின்றோம் என தெரிவித்துள்ள அமைச்சர் மின்சாரத்தை சேமிப்பதற்காக வர்த்தகநிலையங்கள் வழமையை விட முன்னதாகவே தங்கள் செயற்பாடுகளை முடித்துக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
220மில்லியன் சனத்தொகையை கொண்ட பாக்கிஸ்தானே உலகில் அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்யும் நாடாகும்.2020 இல் பாக்கிஸ்தான் 640 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை இறக்குமதி செய்துள்ளது.
பாக்கிஸ்தான் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM