முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன  வெளிநாடு செல்வதற்கான அனுமதி கோரி கொழும்பு பிரதம நீதவானிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் மாதம் 11 தொடக்கம் 16 ஆம் திகதிவரை மத ரீதியான தேவை ஒன்றுக்கு  இந்தியா செல்வதற்காக இவர் அனுமதி கோரியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போது ஏற்பட்ட 883 மில்லியன் ரூபா இழப்பு தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதால் குறித்த அனுமதியை இவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.