பெனால்டியைத் தவறவிட்டு மாலைதீவுகளிடம் தோல்வி அடைந்தது இலங்கை

14 Jun, 2022 | 08:44 PM
image

(நெவில் அன்தனி)

உஸ்பெகிஸ்தான், நாமங்கன், மார்க்ஆஸி விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஏஎவ்சி ஆசிய கிண்ண சி பிரிவு கடைசி தகுதிகாண் போட்டியில் மாலைதீவுகளிடம் 0 - 1 என்ற கோல் வித்தியாசத்தில்  இலங்கை  தோல்வி அடைந்தது.

இதன் மூலம் மாலைதீவுகளுடான கால்பந்தாட்டப் போட்டிகளில் அடைந்துவரும் தோல்விகள் வரலாற்றை இலங்கையினால் மாற்றி அமைக்க முடியாமல் போனது.

சலன சமீர 'ப்றீ கிக்'களை வீணடித்தமை, டிலொன் டி சில்வா பெனல்டியை தவறவிட்டமை ஆகியன இலங்கையின் இன்றைய தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இலங்கை அணியில் 'ப்றீ கிக்' எடுக்கக்கூடிய சிறந்த வீரர்கள் இருந்தபோதிலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்காதது வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்விகளைத் தழுவிய இலங்கையும் மாலைதீவுகளும் இந்த சுற்றுப் போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டும் நோக்கத்துடன் ஒன்றையொன்று எதிர்த்தாடின.

இரண்டு மஞ்சள் அட்டைகள் காரணமாக சுஜான் பெரேரா போட்டியில் விளையாடும் தகுதியை இழந்ததால் சரித்த ரத்நாயக்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் எதிர்த்தாடும் வியூகத்தை பலப்படுத்தும் வகையில் மொஹமத் ஆக்கிப், டிலொன் டி சில்வா ஆகியோருடன் அசிக்கூர் ரஹுமான் முன்களத்திற்கு மாற்றப்பட்டார். மத்திய களத்தில் மரியதாஸ் நிதர்சன், எம்.என்.எம். பஸால் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர். மாலைதீவுகள் தனது பின்களத்தை பலப்படுத்திக்கொண்டு விளையாடியது.

போட்டி ஆரம்பித்தது முதல் இரண்டு அணியினரும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி கோல் போடுவதற்கு முயற்சித்தனர். ஆனால் இரண்டு தரப்பினராலும் முதலாவது 45 நிமிட நேர ஆட்டப் பகுதியில் கோல் எதனையும் போட முடியாமல் போனது.

இடைவேளையின் பின்னர் 56ஆவது நிமிடத்தில் இப்ராஹிம் ஹசனுக்கு பதிலாக வாஹீத்  இப்ராஹிம்   ஹசனை மாற்று வீரராக மாலைதீவுகள் பயிற்றுநர் பிரான்செஸ்கோ மொரீரோ களம் இறக்கினார். அதற்கு 7 நிமிடங்களில் பலனும் கிடைத்தது.

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் வேகமாகவும் சாமர்த்தியமாகவும் செயற்பட்ட மாலைதீவுகள் போட்டியில் முதலாவது கோலை போட்டு முன்னிலை அடைந்தது.

த்ரோ இன் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட  வாஹீத் இப்ராஹிம் ஹசன் உடனடியாக இப்ராஹிம் மஹூதிக்கு பரிமாற்றினார். மஹூதி இடப்புறமாக வேகமாக நகர்ந்த மொஹமத்துக்கு பரிமாற, அவர் இலங்கை கோல்காப்பாளர் கவீஷ் பெர்னாண்டோவின் பாதங்களின் ஊடாக பந்தை கோலினுள் புகுத்தி மாலைதீவுகளை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

ஆறு நிமிடங்கள் கழித்து இலங்கைக்கு கோல் நிலையை சமப்படுத்த பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

ஆனால், டிலொன் டி சில்வாவின் பலம் குன்றிய பெனல்டியை மாலைதீவுகளின் கோல்காப்பாளர் மொஹமத் பைஸால் அலாதியாக தடுத்து நிறுத்தினார். இதன் காரணமாக கோல் நிலையை சமப்படுத்தும் வாய்ப்பு இலங்கைக்கு அற்றுப் போனது.

அதன் பின்னர் கிடைத்த 'ப்றீ கிக்'களை சலன சமீர முறையாகப் பயன்படுத்த தவறினார். கடைசியாக கிடைத்த 'ப்றீ கிக்'கை சரித் ரத்நாயக்க அல்லது மரியதாஸ் நிதர்சன் எடுத்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.

எவ்வாறாயினும் இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை திறமையாக விளiயாடியிருந்தபோதிலும் மற்றொரு கால்பந்தாட்டத் தொடரில் முழுமையாகத் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் நாடு திரும்ப நேரிட்டது துரதிர்ஷ்டம் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18