மைலோ  சுப்பர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான வலைபந்தாட்ட போட்டியில்  குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் சம்பியன்

Published By: Vishnu

14 Jun, 2022 | 08:47 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த மைலோ சுப்பர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் எதிர்பார்த்தவாறு குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை (எச்.எவ்.சி.) அணி சம்பியனானது.

தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகள் பங்குபற்றிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டி பத்தரமுல்லை புத்ததாச மைதானத்தில் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நான்கு குழுக்களில் நடத்தப்பட்ட சுப்பர் 16 பாடசாலைகள் வலைபந்தாட்ட இறுதிப் போட்டியில் கொழும்பு மியூசியஸ் கல்லூரியை 39 - 25 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை சம்பியனாகி பாடசாலைகள் வலைபந்தாட்டத்தில் முடிசூடா இராணிகள் என்பதை மீண்டும் நிரூபித்தது.

மைலோ கிண்ண பாடசாலைகள் வலைந்தாட்டத்தில் 2008ஆம் ஆண்டிலிருந்து 2019வரை தொடர்ச்சியாக 12 வருடங்கள் குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை ஒட்டுமொத்த சம்பியனாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோத்தமி மகளிர் வித்தியாலயத்தை கால் இறுதியில் 18 - 11 என்ற கொல்கள் கணக்கில் வெற்றகொண்ட குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை, அரை இறுதியில் கடும் சவாலுக்கு மத்தியில் 8 - 2 என களுத்துறை மகளிர் வித்தியாலயத்தை வெற்றிகொண்டிருந்தது.

கால் இறுதியில் கண்டி ஹில்வூட் கல்லூரியை 13 - 7 என்ற கோல்கள் கணக்கிலும் அரை இறுதியில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை 14 - 8 என்ற கோல்கள் கணக்கிலும் மியூசியஸ் கல்லூரி வெற்றிகொண்டிருந்தது.

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் மலியதேவ மகளிர் கல்லூரியின் கடும் சவாலை முறியடித்து 12 - 11 என வெற்றிபெற்ற களுத்துறை மகளிர் வித்தியாலயம் 3ஆம் இடத்தைப் பெற்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், கொரோனா தொற்று நோய் தாக்கம் ஆகிய காரணங்களால் தடைப்பட்ட பாடசாலைகள் வலைபந்தாட்டம் 3 வருடங்களின் பின்னர் நடைபெற்ற போதிலும் பல வீராங்கனைகளின் ஆற்றல்கள் பாராட்டும் வகையில் அமைந்திருந்தன.

மேலும் வலைபந்தாட்டப் போட்டிகளுக்கு மீளுயிர் கொடுக்கும் வகையில் நெஸ்லே லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் சுப்பர் 16 பாடசாலைகள் வலைபந்தாட்ட சுற்றுப் போட்டி முதல் தடவையாக நடத்தப்பட்டது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

இந்த சுற்றுப் போட்டியில் வலைபந்தாட்ட இராணியாக குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை வீராங்கனை ஹிருணி ஹேஷானி தெரிவானார்.

அதிசிறந்த கோல்போடும் வீராங்கனை: பாஷி உடகெதர (எச்.எவ்.சி.)

அதிசிறந்த தடுத்தாடும் வீராங்கனை: நேதங்க குணரட்ன (மியூசியஸ் கல்லூரி)

அதிசிறந்த எதிர்த்தாடும் வீராங்கனை: நட்டாஷா டயஸ் (எச்.எவ்.சி.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில்...

2023-12-09 10:07:46
news-image

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட்...

2023-12-09 10:08:28
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-08 11:59:15
news-image

மும்பையில் 1வது ஆசிய Dueball சம்பியன்ஷிப்...

2023-12-08 23:48:39
news-image

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை...

2023-12-07 12:14:41
news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34