Huawei நிறுவனம், இலங்கையில் முன்னெடுத்து வருகின்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு அத்தியாயமாக கொழும்பில், லிபேர்ட்டி பிளாஸா வர்த்தக மையத்தின் கீழ்த் தளத்தில் வர்த்தகநாமத்தின் புதிய அனுபவ காட்சியறையொன்றை திறந்து வைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய Huawei  ஸ்மார்ட்போன்கள், tablet சாதனங்கள் மற்றும் ஏனைய சாதனங்களை நேரடியாக அனுபவித்து அவை தொடர்பில் தீர்மானிப்பதற்கு இடமளிக்கும் வகையில் நேரடி இடைத்தொடர்பாட்டு அனுபவங்களைக் கொண்ட கருமபீடங்களுடன் இப்புதிய அனுபவ காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அனைத்து பிரதான மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் தனது அடிச்சுவட்டை விஸ்தரிக்கவேண்டும் என்பது தொடர்பில் Huawei கொண்டுள்ள மும்முரமான திட்டங்களுக்கு இப்புதிய அனுபவ காட்சியறையை திறந்து வைத்துள்ளமை துணை போகின்றது.

வர்த்தகத் துறை பிரபலங்களுள் ஒருவரான டிலித் ஜெயவீர பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு, இலங்கையில் Huawei சாதனங்களுக்கான பொது முகாமையாளரான கல்ப பெரேரா மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளரான சந்தன சமரசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து இந்த அனுபவ காட்சியறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளனர்.

இச்சந்தையில் நிறுவனம் கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கூறுகையில்,

“வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்துகொள்வதன் மூலமாக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் Huawei முன்னிலை வகித்துவருகின்றது. இலங்கையில் ஒட்டுமொத்த தர அனுபவத்தை வழங்கி ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் உள்ள வர்த்தகநாமமாக திகழ வேண்டும் என்பதே எமது பிரதான இலக்கு. 

இது எமது சில்லறை வர்த்தகத்துறையை வலுப்படுத்துவதுடன், எமது வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த முன்னணி சாதனங்களை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மட்டுமன்றி, நியாயமான விலைகளில் அவர்கள் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்வதற்கும் வழிவகுத்துள்ளது.”

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான பொது முகாமையாளரான கல்ப பெரேரா குறிப்பிடுகையில்,

“புதிய அனுபவ மையத்தை ஆரம்பித்து வைத்துள்ளமை நகரப்புற சந்தைக்கு Huawei வழங்கும் தரமான உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பில் நேரடியாக கண்டறிவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையிலுள்ள எமது வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த மையங்களுக்கு நேரடியாகச் சென்று Huawei வர்த்தகநாமத்தின் மகிமையை நேரடியாக அனுபவிக்க வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.”

அடுத்த காலாண்டிற்குள் தனது விநியோக வலையமைப்பை 3,000 இற்கும் மேற்பட்ட விற்பனை மையங்களைக் கொண்டதாக அதிகரிப்பதற்கு Huawei திட்டமிட்டுள்ளதுடன், உள்நாட்டில் தனது பேணற்சேவை வழங்கல்களை மேம்படுத்தும் வகையில் இந்த ஆண்டின் முடிவில் நாடளாவியரீதியில் 26 பேணற்சேவை மையங்களை ஏற்படுத்துவத்கும் திட்டமிட்டுள்ளது. 

இலங்கையில் Huawei ஸ்மார்ட்போன்களுக்கான கேள்வி அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை ரூடவ்டு செய்யும் வகையில் இப்புதிய அனுபவ காட்சியறை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் உள்நாட்டில் அனைவருக்கும் Huawei அசல் உற்பத்திகள் மற்றும் சேவைகள் இலகுவாகக் கிடைக்கப்பெறுவதையும் உறுதி செய்கின்றது.

GFK 2016 3ஆம் காலாண்டு அறிக்கையின் பிரகாரம்,  Huawei இலங்கையில் 24.4% சந்தைப் பங்கினைக் கைப்பற்றியுள்ளதுடன், நாட்டில் இரண்டாவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற ஸ்தானத்தை தொடர்ந்தும் விரைவுபடுத்தி வருகின்றது. Brand Finance இன் பிரகாரம் 2016 ஆண்டில் உலகின் மிகச் சிறந்த 100 பெறுமதிமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலில் 47 ஆம் இடத்தில் Huawei உள்ளது. Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் Huawei அண்மையில் 72 ஆவது ஸ்தானத்திற்கு திடீர் முன்னேற்றம் கண்டுள்ளது.