நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை

By Digital Desk 5

14 Jun, 2022 | 08:21 PM
image

நாட்டில் தொடர்ந்து எரிபொருளுக்கான தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென மக்கள் கூடியமையால் இன்று (14) பதற்றமான சூழல் நிலவியது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு மாத்திரம் என வைக்கப்பட்டிருந்த பெற்ரோலினை எரிபொருள் நிலைய  ஊழியர் ஒருவரின் உதவியுடன் தனியார் ஒருவருக்கு  முச்சக்கர வண்டியினுள் கேன்களை வைத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக பெற்ரோலினை வழங்கியமையால் வரிசையில்  காத்திருந்து எரிபொருள் கிடைக்காதவர்கள் எரிபொருள் பெற முயன்ற போது, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன் போது எட்டு மணித்தியாலம் வரிசையில் காத்திருந்த ஒருவர் இவ்வாறு தெரிவித்தார். சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை இல்லை என ஊழியர்கள் தெரிவிப்பதாகவும், நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிக விலையிலும் அதிக அளவிலும் எரிபொருட்களை வழங்குவதாகவும் கூறினார். 

இதன்போது  சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா பொலிஸார் பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right