வத்தளையில் துப்பாக்கிச்சூடு : இளைஞன் பலி

By Vishnu

14 Jun, 2022 | 03:04 PM
image

வத்தளை, எலக்கந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்க்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right