நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப்கேஸ் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலை 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.
இரு மாதங்களுக்கு மேலாக லாப்கேஸ் எரிவாயு வழங்கப்படாத நிலையில் நுவரெலியா மின்சார சபை கட்டிடத்திற்கு முன்பாக இன்று (14) விநியோகம் இடம்பெற்றது.
லாப்கேஸ் எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 1150 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த , கந்தபளை ,மாகஸ்தோட்டம் , நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.
எனினும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட்டமையால் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மை நிலை ஏற்பட்டிருந்தது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM