வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி

By Vishnu

14 Jun, 2022 | 11:26 AM
image

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பயணிகளுக்கு கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அரச ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரம் ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக வாரத்தில் கடமையாற்றும் ஒருநாளை அரச விடுமுறை தினமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right