பொருளாதார நெருக்கடியுடன்கூடிய சிக்கலான பயணத்தைத் தொடர சர்வதேச சமூகத்தின் ஆதரவே ஊக்கமளிக்கின்றது - ஜீ.எல்.பீரிஸ் உதவிகோரி உரை

Published By: Vishnu

13 Jun, 2022 | 09:12 PM
image

(நா.தனுஜா)

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் மிகவும் நெருக்கடியான பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை புரிந்துகொள்ளவேண்டும்.

சவால்களை மறுக்காமல் ஏற்றுக்கொள்வதே எமது அணுகுமுறையாகும். அதன்படி தெளிவான நோக்கம், அதனை நடைமுறைப்படுத்துவுதற்குரிய தெளிவு, மக்கள் மீளெழுச்சித்தன்மை ஆகியவற்றின்மீது நம்பிக்கைவைத்து மிகவும் சிக்கலான பயணத்தை ஆரம்பிக்கின்றோம்.

 இந்த நெருக்கடி நிலைமையில் சர்வதேச சமூகம் காண்பித்திருக்கும் ஆதரவு எம்மை ஊக்குவித்திருப்பதுடன், அதனைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நிலைவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 

இலங்கையானது அதன் அடைவுகளையும் சவால்களையும் இந்தப் பேரவையுடனும், ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய கிளைக்கட்டமைப்புக்களுடனும் வெளிப்படையாகப் பகிர்ந்து வந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த சில வாரங்களாக இலங்கை முகங்கொடுத்திருக்கும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருக்கும்.

இந்த நெருக்கடியானது கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் உள்ளிட்ட பூகோள நெருக்கடியின் விளைவாக மேலும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நாட்டில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் பொருளாதார நிவாரணம் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தியவையாக அமைந்திருக்கின்றன.

இந்தச் சவால்களை ஏற்றுக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கியவாறு முன்நோக்கிப் பயணிப்பதற்கு நாட்டின் அனைத்துப் பிரிவினரினதும், குறிப்பாக இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் அவசியம் என்று கருதுகின்றோம். 

அதன்படி எதிர்காலத்திற்கான நிலையான அடித்தளமாக, பரந்த அடிப்படையிலான அரசாங்கத்தின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி ஜனாதிபதியும், பிரதமரும் ஒருமித்த அணுகுமுறையைக் கோரியுள்ளனர்.

புதிய பிரதமரின் நியமனம் மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையின் நியமனம் ஆகியன உள்ளடங்கலாக அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன. 

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தின் அவசியம், சுயாதீனக்கட்டமைப்புக்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் தொடர்பான மறுபரிசீலனை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயகக்கோட்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த மறுசீரமைப்புக்கள் ஜனநாயக அரசியலமைப்புக் கட்டமைப்பிற்குள் உரிய வரைமுறைகளுக்கு அமைவாக இடம்பெறுவதை நாமனைவரும் கூட்டாக உறுதிசெய்யவேண்டும். மாற்றத்தை நோக்கிய செயன்முறையானது, மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் ஜனநாயகக் கட்டமைப்புக்களை சீர்குலைக்கக்கூடாது.

 கருத்து வேறுபாடுகள் காணப்படும் பட்சத்தில் அவை அமைதியானதும், ஜனநாயகமானதுமான முறையில் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.

அண்மையகாலக் குழப்பங்களின்போது சட்டம், ஒழுங்கைப் பேணுதல் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள், சேவைகளைத் தடையின்றி விநியோகிக்க அனுமதித்தல் ஆகிய நோக்கங்கங்களுக்காகவே வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால நடைமுறை என்ற பிறப்பிக்கப்பட்டன.

கடந்த மேமாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நாடளாவிய ரீதியில் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலரின் மரணம் ஆகிய சம்பவங்களை நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

 தற்போதைய நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பொதுமக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைத் தடையின்றி வழங்கவும் பங்களிப்புச்செய்யக்கூடிய வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான செயற்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்தி சர்வதேச நாடுகள் மற்றும் பொதுக்கட்டமைப்புக்களுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம். 

அண்மைய காலங்களில் பல்வேறு சவால்கள் மற்றும் இடையூறுகள் காணப்பட்ட போதிலும், சில முக்கிய விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக்கொண்டுவர விரும்புகின்றேன். கடந்த கூட்டத்தொடரின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் திருத்தியமைக்கப்படும் என்று நான் உறுதியளித்திருந்த நிலையில், அதற்குரிய திரு;தத முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்திருத்தங்கள் மூலம் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத்தடைச்சட்டத்தில் கணிசமான முன்னேற்றமும், ஆழமான மாற்றங்களும் ஏற்படும் என்பதுடன் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் வலுப்படுத்தும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வின் பின்னர் இவ்வாண்டு மார்ச் - ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ்த் தடுத்துவைக்கப்பட்டிருந்த 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் நடவடிக்கைகளின் ஓரங்கமாக விசாரணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட 83 சதவீதத்திற்கும் அதிகமான நபர்களை சந்தித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு அதன் ஆரம்ப ஒதுக்கீடான 759 மில்லியன் ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 53 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

போரின் முடிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட 92 சதவீதத்திற்கும் அதிகமான தனியார் நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகைகளை அனுப்பியிருப்பதுடன். அதகுறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

 ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஃ1 தீர்மானத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையை இலங்கை நிராகரிப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது தற்போது மீளவலியுறுத்துகின்றோம். மேலும் இலங்கையின் சவாலான பொருளாதார மற்றும் சமூக நிலை குறித்து மனித உரிமைகள் பேரவை புரிந்துகொள்ளவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேவேளை எமது கடப்பாடுகளை உரியவாறு பூர்த்திசெய்வோம் என்று உறுதியளிக்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31