'விக்ரம்' குஷியில் நாயகன்

Published By: Digital Desk 5

13 Jun, 2022 | 09:01 PM
image

குமார்சுகுணா

கொரோனாவிற்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படங்கள் பல இருப்பினும். இந்தளவு  எந்த திரைப்படத்தின்  நாயகனும்  குஷியாக இருக்க வில்லை. 

ஆனால் நமது  நாயகன் இருக்கிறார். ஆம் உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம். கடந்த 3ஆம் திகதி இத்திரைப்படம் உலகம் முழுவதிலும் திரைக்கு வந்தது.

இத்திரைப்படம் வெளியாகிய ஒரு வாரத்திற்குள் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளதாகவும்.  மூன்றே நாட்களில் 70 கோடியை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் , பிக்காஸ் சி்ன்னதிரை நிகழ்ச்சியென இருந்த கமல் பல வருடங்கள் திரையில் தோண்றாமையும் வெற்றித்திரைப்படம் ஒன்றை கொடுக்காமையும் அவரது ரசிகர்களுக்கு கவலையாக இருந்திருக்க கூடும். அந்த கவலையை நிவர்த்தி செய்வதாக விக்ரம் அமைந்துள்ளது. என்றே கூற வேண்டும்.

எப்போதுமே ஒரு நடிகனின் ரசிகன் இயக்குநராக இருக்கும் போது உருவாக்கப்படும் திரைப்படங்கள் குறித்த நடிகரின் எல்லா ரசிகர்களின் ஆசையையும் பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கும். உதாரணமாக கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்.

அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் ரஜினி ரசிகர்கள். அவர் ரஜினியை வைத்து உருவாக்கிய பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றித்திரைப்படமாக மட்டும் அல்லாது ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த திரைப்படமாக இருந்தது.

அதுபோலதான் லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் . அவர் உருவாக்கியுள்ள விக்ரம் திரைப்படம் கமல் ரசிகர்களை திருப்திபடுத்தும் திரைப்படமாக அமைந்திருக்கின்றது.

வித்தியாசமாக கதைக்களத்தோடு சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இத்திரைப்படத்தை  உலகளவில்  பல கோடி  பல மொழி ரசிகர்களும்  தென்னிந்திய திரையுலகமும்  எதிர்பார்த்து காத்திருந்தனர். 

ஏன்எனில் 1980 களில் கமல் நடித்த விக்ரம் என்ற திரைப்படம் மிக பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்திருந்து. பல புதுமைகளை உள்வாங்கிய அத்திரைப்படத்தின் பெயரில் பல தசாப்பதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு திரைப்படம். அதுவும் 80 களில் வெளியாகிய விக்ரம் நாயகனே தற்போதும் கதாநாயகன்.

அந்த வகையில் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தியும் செய்யும் வகையில் விக்ரம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று  மிக பெரிய வெற்றியை கண்டுள்ளது.

கமல்ஹாசன் `விக்ரம்' படத்தின் வெற்றியால்  மிக பெரிய மகிழ்ச்சியில் குஷியில் இருக்கின்றார் என்றே கூற வேண்டும். 

திரைப்படம் குறித்து கமல் தெரிவித்துள்ளதாவது, நன்றியை தவிர  சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. சந்தோசத்தை கடந்து வெற்றி பயத்தை கொடுத்திருக்கின்றது. வெற்றி கிடைத்தது போதும் என்று எண்ணவில்லை; இன்னும் வெற்றிக்காக உழைப்போம்.  படத்துக்கு வரவேற்பு பிரமாதமாக உள்ளது.

மனோசரித்திரா முதன் முதலில் வெளியானபோது எந்த மாதிரியான பாராட்டுக்கள் எனக்கு ஆந்திராவில் கிடைத்ததோ, அதேமாதிரியான பாராட்டு இப்போதும் அங்கு கிடைத்துள்ளது. தமிழகத்திலும், மும்பையிலும் அதேபோன்று எதிர்பார்ப்புகள் இருந்தன.

வெளிநாடுகளை பொறுத்தவரை, அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பிரிண்டுகள் வெளியாகி உள்ளது. இந்த மாதிரி ஒரு  வெளியீட்டுக்கான வரவேற்பை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.

கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 21 கோடி ரூபா அளவுக்கு விக்ரம் திரைப்படம் முதல் நாளில் வசூலித்துள்ளதாக  தகவல்கள் தெரிவித்தன.

திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் கடந்து விட்ட போதிலும் இன்றும் மக்களிடையே உற்சாகம் குறையாத வரவேற்பு கிடைத்து கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி திரைப்படம்  என்கிறார்கள் திரை வட்டாரத்தினர்.

திரைப்படத்தின்  கதாநாயகனும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனத் தன்னுடைய சந்தோஷத்தைப் பரிசுப்பொருள்களாக பகிர்ந்து அளித்து வருகிறார்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு  இந்திய மதிப்பில் ரூ.75 இலட்சம் மதிப்புள்ள 'Lexus ES300h' கார், மற்றும் திரைப்படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குநர்களுக்கு 'Apache RTR 160' பைக்குகள் என சர்ப்ரைஸ் கொடுத்தவர், படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசளித்திருக்கிறார். படத்தில் சூர்யாவின்  கதாபாத்திரத்தின் பெயரும் 'ரோலக்ஸ்'தான்.

படத்தில் சூர்யாவின் பாத்திரத்தை ரசிகர்கள் மிக பெரிய அளவில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் உலகளவில் ‘ரோலக்ஸ்’ ரெண்டிக் ஆகியது.

இது உண்மையில் ரோலோஸ் கடிகார நிறுவனத்தையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும். அதுமட்டும் அல்ல கமல் அளித்து வரும் பரிசுகள் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய மேலும் பலருக்கும் கமல் ஏதேனும் பரிசுகளை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15
news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48
news-image

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்'...

2024-09-12 16:50:19
news-image

மீண்டும் வடிவேலு - சுந்தர் சி...

2024-09-12 16:10:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...

2024-09-12 13:35:36