ஐ.சி.சி. மாதாந்த விருதை வரலாற்றில் வென்றெடுத்த முதலாவது இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்

Published By: Vishnu

13 Jun, 2022 | 09:01 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) மே மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரராக இலங்கையின் ஏஞ்சலோ மெத்யூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஐசிசியின் மாதாந்த விருது வரலாற்றில் இவ்விருதை வென்றெடுத்த முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெறுகிறார்.

இவ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த சக நாட்டு வீரர் அசித்த பெர்னாண்டோ, பங்களாதேஷின் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோரை பின்தள்ளி இந்த விருதை மெத்யூஸ் தனதாக்கிக்கொண்டார்.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை ஈட்டிய வெற்றியில் மெத்யூஸ் பிரதான பங்களாற்றியிருந்தார்.

அந்தத் தொடரில் 344 ஓட்டங்களை மொத்தமாக குவித்த மெத்யூஸ்  அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவரானார்.

சட்டாக்ரோம் விளையாட்ரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 199 ஓட்டங்களைக் குவித்த மெத்யூஸ், மிர்பூர் விளையாட்டரங்கில்  நடைபெற்ற  இரண்டாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைக் குவித்து அந்த டெஸ்டிலும் தொடரிலும் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தார்.

மெத்யூஸின் அபார துடுப்பாட்டத்தின் பலனாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய  இலங்கை   ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் 55.56 விகிதாசார புள்ளிகளுடன் 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20