கட்டுத்துபாக்கி வெடித்ததில் பலத்த காயங்களுக்குள்ளான யானைக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம்

By Vishnu

13 Jun, 2022 | 01:31 PM
image

புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகில் காட்டுப்பகுதியில் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் காட்டு யானையொன்று மீட்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டு யானையைக் காப்பாற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கடந்த 13 நாட்களாக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் காயங்களுக்குள்ளான காட்டு யானைக்கு பல பகுதிகளிலும் இருந்தும் பிரதேச வாசிகள் உணவுகளை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

காயங்களுக்குள்ளாகி 13 நாட்கள் கடந்தும் இதுவரை 2 தடவைகள் மாத்திரமே குறித்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் பற்றாக்குறைக் காரணமாக மிருக வைத்தியர்கள் வருகைத் தருவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டு யானைக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தால் குணமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வண்ணாத்து வில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54