பிரபல அரசியல்வாதியின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வனாத்தவில்லு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கரடிபுவல் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பெண்ணொருவருக்கு அரசாங்க தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து 15 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதுடன், பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு எதிராக 25 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.