நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர்மலையில், புத்தர் சிலை நிறுவுதல், விசேட வழிபாட்டு முயற்சி - மக்களின் ஆர்ப்பாட்டத்தால் நிறுத்தம்

Published By: Digital Desk 4

12 Jun, 2022 | 05:14 PM
image

கே .குமணன் 

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், இன்றையதினம்(12)  முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஸ்டை செய்வதற்கும் , அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கணக்கான  பௌத்தபிக்குகள் மற்றும், இராணுவத்தினர்  பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் ,மற்றும் சிவில்  ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

குறித்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குவிசாரணைகள் இடம்பெற்றிருந்தன. 

அவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது. 

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், 'கபோக்' கல்லினால் ஆன புத்தர் சிலையொன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இவ்வாறு தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. 

குறிப்பாக கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய ஏற்பாடுகளில் முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் இன்றையதினம் முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து  பெருந்திரளான பெரும்பாண்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசுவாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வருகைதந்திருந்தனர். 

இவ்வாறாக வழிபாட்டு முயற்சிகள் இடம்பெறுவதற்கு அப்பகுதித் தமிழ் மக்கள் மற்று, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான கி.சிவலிங்கம், இ.கவாஸ்கர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் சமூக சயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள்  இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார்  அவர்களைத் தாக்கி கைதுசெய்து, பின்னர் விடுவித்திருந்தனர். 

தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார். 

அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க, 

குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புணர்நிர்மாணம் செய்யும் வேலைளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டுமானங்களை  கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார். 

அத்தோடு தமது திணைக்களத்துக்கும் , பௌத் துறவிகளுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் அவர் தெரிவித்த கருத்திற்கு மாறாக முன்பிருந்ததைவிட குருந்தூர் மலையில் பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர்மலையில் பெருமளவான, பௌத்த பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. 

அதேவேளை இதன்போது குருந்தூர் மலையைச் சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார். 

தொடர்ந்து தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த விசேட வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டது. 

அந்தவகையில்  முன்னெடுக்கப்பட்ட விசேட வழிபாடுகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டதுடன், பிறிதொருநாளில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர் உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா :...

2025-03-19 12:56:38
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; கட்டுப்பணம்...

2025-03-19 12:48:22
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32