இலங்கைக்கான பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது பிரிட்டன்

By Vishnu

13 Jun, 2022 | 07:10 AM
image

(நா.தனுஜா)

அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கைக்குப் பயணிப்பது குறித்து பிரிட்டன் அரசாங்கம் தமது பயண வழிகாட்டலில் வெளியிட்டிருந்த எதிர்ப்பைத் தற்போது தளர்த்தியுள்ளது.

 இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது கடந்த மேமாதம் 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைச்சம்பவங்களின் காரணமாக இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல உலகநாடுகள் பயண வழிகாட்டல்கள் ஊடாகத் தமது பிரஜைகளிடம் வலியுறுத்தியிருந்தன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது பிரிட்டன் இலங்கைக்கான அதன் பயண வழிகாட்டலைத் தளர்த்தியிருக்கின்றது. 

'இறக்குமதிக்கு அவசியமான வெளிநாட்டு நாணயப்பற்றாக்குறை காரணமாக மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவுப்பதார்த்தங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்புநிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் போன்றவற்றில் நீண்ட மக்கள் வரிசைகள் காணப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. தனியார் கார் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவையைப் பெற்றுக்கொள்வதில் தாமதமேற்படக்கூடும்.

அத்தோடு நாளாந்தம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுவருகின்றது' என்று தற்போது பிரிட்டன் புதுப்பித்து வெளியிட்டிருக்கும் பயண வழிகாட்டலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 அதேவேளை நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுக்கூடும் என்பதால் அத்தகைய போராட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களில் இருந்து விலகியிருக்குமாறும் பிரிட்டன் அரசாங்கம் அதன் பிரஜைகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கைக்குப் பயணிப்பது குறித்து ஏற்கனவே வெளியிட்டிருந்த எதிர்ப்பை தற்போது அந்நாட்டு அரசாங்கம் அதன் பயண வழிகாட்டலில் தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53