அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு உதவக் கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்வு

Published By: Digital Desk 4

12 Jun, 2022 | 02:49 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அவுஸ்திரேலியாவினால் உதவக்கூடிய வழிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கலாநிதி ரிச்சர்ட் மார்லஸைசுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் பீரிஸ் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ்,  இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் உணவுப்  பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தி உதவியாக 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அறிவித்தமைக்காக அவர் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் கொவிட்-19 பிரதிபலிப்புக்கான 11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியிலான ஆதரவிற்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவின் பின்னர் இலங்கையின் கரையோரங்களை சுத்தப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உபகரணங்களுக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அவுஸ்திரேலியாவினால் உதவக்கூடிய வழிகள் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், குடியேற்றம் மற்றும் எல்லை நிர்வாக ஒத்துழைப்பு, இலங்கை  மாணவர்களுக்கான அதிக வாய்ப்புக்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம், பாலி செயன்முறை, பொதுநலவாயம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் போன்ற சர்வதேச அமைப்புக்களிலான மேம்பட்ட ஒத்துழைப்பு ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09
news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13