நுவரெலியாவில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குழப்பம் - திடீரென ஆத்திரமடைந்த மக்கள்

By T Yuwaraj

12 Jun, 2022 | 02:21 PM
image

நுவரெலியா பிரதான நகரில் நேற்றைய தினம் (11) மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே டோக்கன் முறையில் ஒருவருக்கு தலா மூன்று லீற்றர் வீதம் வரிசையில் முன்னிலையில் இருந்தவர்களுக்கு மாத்திரம்  மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது.

நேற்று அதிகாலை 4 மணி முதல் வரிசையில் நின்ற அவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனவும் வரிசையில் நிற்பவர்கள் அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்தனர்.

பின்னர் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நான்கு மணிவரை மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right