(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். 11 ஆம் திகதி சனிக்கிழமை இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம
தம்புத்தேகம லுனுவௌ வாவிக்கு நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் அனுராதபுரம் விகாரைக்கு வழிபாட்டிற்காக சென்று , அதன் பின்னர் லுனுவெவ வாவிக்கு நீராடச் சென்ற நிலையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி பழியாகியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 27 வயதுடைய அஹங்கல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களாவர்.
பாதுக்கை
பாதுக்கை - உடுகம்கந்த பிரதேசத்தில் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய பொப்பே, பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவ்வாறு உயிரிழந்தவர்கள் தொடர்பில. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM