வாரத்தில் ஒரு முறை மாத்திரம் எரிபொருள் விநியோகம் : ஜூலை முதல் புதிய நடைமுறை - எரிசக்தி அமைச்சர் 

Published By: Digital Desk 4

12 Jun, 2022 | 12:54 PM
image

நாட்டின் தற்போதைய எரிபொருள் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு உத்தரவாதமான வாராந்த ஒதுக்கீட்டை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து மேலதிக கடன் பெற  எதிர்பார்த்துள்ளோம் - காஞ்சன விஜேசேகர | Virakesari.lk

இது குறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது

1) - தடையில்லா மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் இருக்கும் வரை, எரிபொருள் வரிசை சாத்தியமற்றது. 

நிதிப்பிரச்சினைகள் உள்ள நிலையில்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்கு நிர்வகிக்க எரிபொருளை இறக்குமதி செய்கிறது, ஆனால் சில நுகர்வோர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக எரிபொருளை சேகரிக்கின்றனர்.

2) டீசல், உலை எண்ணெய் குதம் ஆகியவற்றிற்கு 24 மணி நேர மின் விநியோகத்திற்கு கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாதந்தோறும் செலவாகிறது.

எரிவாயு பற்றாக்குறையால் மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மாதாந்திர எரிபொருள் கட்டணம் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.

3) நிதி நிலைமையை வலுப்படுத்தி, 24 மணி நேர மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தை மீட்டெடுக்கும் வரை, நுகர்வோர்களை  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்து அவர்களுக்கு உத்தரவாதமான வாராந்திர ஒதுக்கீட்டை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஜூலை முதல் வாரத்தில்  இது நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலை மாணவர்கள்...

2025-06-18 16:32:31
news-image

நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது -...

2025-06-18 16:32:09
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் நீதிமன்றில்...

2025-06-18 16:15:58
news-image

4 வயது மகளை கொடூரமாக தாக்கி...

2025-06-18 15:32:41
news-image

கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர்...

2025-06-18 16:08:36
news-image

வலி. கிழக்கு தவிசாளராக நிரோஸ் தெரிவு

2025-06-18 16:19:08
news-image

இந்த ஆண்டு நாட்டில் 100 ஆரம்ப...

2025-06-18 14:54:14
news-image

சபாநாயகரை சந்தித்தனர் நேபாள பாராளுமன்ற தூதுக்...

2025-06-18 16:06:24
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர்...

2025-06-18 15:43:49
news-image

கடற்கரைகளில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்த...

2025-06-18 15:50:10
news-image

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து ;...

2025-06-18 15:33:17
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்...

2025-06-18 14:22:44