ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இன்று 31 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கூடு­கின்­றது. சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­திபதியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இரவு 7.00 மணிக்கு சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு கூடு­கின்­றது.

இக் கூட்­டத்தின் போது சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விடு­பட்டு தனித்து இயங்கும் குழு­வினர், அத்­தோடு சுதந்­திரக் கட்­சியில் இருந்து கொண்டு புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்க உள்­ள­வர்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்டு தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­மென்றும் கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

அதே­வேளை, கட்­சியின் எதிர்­காலம், அமைப்பு நட­வ­டிக்­கைகள் மற்றும் கட்­சி­யுடன் இணைந்­துள்ள ஏனைய கட்­சி­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாகப் பேசப்­பட்டு முடி­வெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் சுதந்­திரக் கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­வ­தோடு ஐ.தே. கட்­சி­யுடன் இணக்­கப்­பாட்டு ஆட்சி அதா­வது தேசிய அரசின் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

அதே­வேளை இன்­றைய சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் தொடர்­பாக அதன் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக்க தெரி­விக்­கையில்;

இது ஜனாதிபதி தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வழமை யாக இடம்பெறும் மத்தியகுழுக் கூட்டம் என தெரிவித்தார்.