தம்மிக பெரேராவின் தீர்மானங்கள் வர்த்தக நிறுவனங்களில் நேரடித்தாக்கத்தை ஏற்படுத்தி சச்சரவுகளைத் தோற்றுவிக்கும் -மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

By Vishnu

12 Jun, 2022 | 12:13 PM
image

(நா.தனுஜா)

தம்மிக பெரேரா பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியில் தொடர்புபட்ட நபராக இருக்கின்றார்.

எனவே கொள்கைவகுப்பாளர் என்ற ரீதியிலும், அநேகமாக எதிர்கால அமைச்சர் என்ற அடிப்படையிலும் தம்மிக பெரேராவினால் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானங்கள் அந்நிறுவனங்களிலும், அவை தொடர்புபட்டிருக்கும் துறைகளிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் சச்சரவுகளையும் தோற்றுவிக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளடங்கலாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலமைப்பிற்கும் மக்கள் ஆணைக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றது.

நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் சட்டபூர்வத்தன்மை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றத் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம் சில நாட்களுக்கு முன்புவரை தம்மிக பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக இருக்கவில்லை என்பதுடன், அரசியலமைப்பின் 99 ஏ சரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படுவதற்கான தகுதியுடையோரின் பட்டியலில் அவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.  

தம்மிக பெரேரா பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியில் தொடர்புபட்ட நபராக இருக்கின்றார்.

எனவே கொள்கைவகுப்பாளர் என்ற ரீதியிலும், அநேகமாக எதிர்கால அமைச்சர் என்ற அடிப்படையிலும் தம்மிக பெரேராவினால் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானங்கள் அந்நிறுவனங்களிலும், அவை தொடர்புபட்டிருக்கும் துறைகளிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் சச்சரவுகளையும் தோற்றுவிக்கும்.

எனவே இந்த சச்சரவுகள் தம்மிக பெரேரா பல்வேறு நிறுவனங்களிலும் வகித்த பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வதன் மூலம் தீர்க்கப்படமுடியாததாகும்.

இது தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு எவ்வாறு தகுதி பெறுகின்றார் என்பதைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.

அதுமாத்திரமன்றி தம்மிக பெரேரா தொடர்புபட்டிருக்கக்கூடிய நிறுவனங்கள் அரச அல்லது பொதுக்கூட்டுத்தாபனங்கள் சார்பில் தொடர்ந்து செயற்படும் பட்சத்தில் அது அரசியலமைப்பின் 91(1) (ஏ) சரத்தை மீறுவதாக அமையக்கூடும். 

அரசியலமைப்பின் பிரகாரம் மாவட்ட வேட்புமனு அல்லது அரசியல் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியபட்டியல் உறுப்பினர் பெயர்கள் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டிருக்கக்கூடிய ஒருவரையே பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கமுடியும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்த நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து உறுதியாக இருந்துவந்திருப்பதுடன், கடந்த காலங்களில் இதற்கு மாறான வகையில் இடம்பெற்ற நியமனங்களின்போது அதனை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தியிருக்கின்றோம். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளடங்கலாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலமைப்பிற்கும் மக்கள் ஆணைக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளை, பாராளுமன்றத்தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் சரத்தைத் திருத்தியமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹசிம்...

2022-10-05 12:58:17
news-image

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு...

2022-10-05 12:10:30
news-image

தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்...

2022-10-05 12:02:41
news-image

உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்...

2022-10-05 12:15:18
news-image

போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளரை இடமாற்றக்...

2022-10-05 12:42:47
news-image

பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன -...

2022-10-05 11:30:12
news-image

சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

2022-10-05 11:24:46
news-image

அடக்குமுறை தொடர்ந்தால் ஆட்சியிலிருந்து விரைவில் வெளியேற...

2022-10-05 11:28:33
news-image

வெளியானது எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பான...

2022-10-05 12:35:42