நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைதுசெய்துயு அம்பாறை பாணமை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினர் சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவுஸ்திரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 6 சிறுவர்கள் 6 பெண்கள் உட்பட 36 பேர் சட்டவிரோதமாக இருப்பதை கண்டுபிடித்து அவர்களை கைதுசெய்து கரைக்கு கொண்டுவந்து பாணமை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து கடலில் இருந்து படகை வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM